Tuesday, October 22, 2013

ஆட்டுக்கால் பாயா ...

இந்த மட்டன வாங்கி குக்கர்ல மசாலாவுக்கு தேவையான அனைத்தும் போட்டு தாளித்து 3 பெரிய வெங்காயம் நல்லா பெடிசா வெட்டி வதக்கி, 4 பச்சமிளகாய்,(காரம் தேவைனா இன்னும் 2 சேர்த்துக்கலாம்) 2தக்காளி போட்டு, உப்பு, மஞ்சத்தூள், இஞ்சிபூண்டு,சேர்த்து அந்த இஞ்சிபூண்டுல கறியபோட்டு கொஞ்ச நேரம் வதக்கி 2 டீஸ்பூன் மிளகுதூள், 2 டீஸ்பூன் மல்லித்தூள்,1.1/2 டீஸ்பூன் மிளகாத்தூள்,புதினா, மல்லி. போட்டு 2 விசில் விட்டு இறக்கி தனியா தேங்காய் ஒரு 6 பத்தை( அறைமூடிக்கு கம்மி ) பாதம் பருப்பு ஒரு 10 போட்டு நல்லா நைசா அரைச்சி மூடிய தொறந்து இந்த கலவைய கலக்கி நல்லா பச்ச வாடை போற வரை கொதிக்க விட்டு இறக்கி இப்ப அந்த ஆப்பத்துடன் தொட்டு சாப்பிட்டு பாருங்க அட, அட, அட.      

No comments:

Post a Comment