Tuesday, October 22, 2013

ஆட்டுக்கால் பாயா ...

இந்த மட்டன வாங்கி குக்கர்ல மசாலாவுக்கு தேவையான அனைத்தும் போட்டு தாளித்து 3 பெரிய வெங்காயம் நல்லா பெடிசா வெட்டி வதக்கி, 4 பச்சமிளகாய்,(காரம் தேவைனா இன்னும் 2 சேர்த்துக்கலாம்) 2தக்காளி போட்டு, உப்பு, மஞ்சத்தூள், இஞ்சிபூண்டு,சேர்த்து அந்த இஞ்சிபூண்டுல கறியபோட்டு கொஞ்ச நேரம் வதக்கி 2 டீஸ்பூன் மிளகுதூள், 2 டீஸ்பூன் மல்லித்தூள்,1.1/2 டீஸ்பூன் மிளகாத்தூள்,புதினா, மல்லி. போட்டு 2 விசில் விட்டு இறக்கி தனியா தேங்காய் ஒரு 6 பத்தை( அறைமூடிக்கு கம்மி ) பாதம் பருப்பு ஒரு 10 போட்டு நல்லா நைசா அரைச்சி மூடிய தொறந்து இந்த கலவைய கலக்கி நல்லா பச்ச வாடை போற வரை கொதிக்க விட்டு இறக்கி இப்ப அந்த ஆப்பத்துடன் தொட்டு சாப்பிட்டு பாருங்க அட, அட, அட.      

Monday, October 21, 2013

ஆப்பம்...

ஆப்பம் இட்லி தோசை மாதிறி சட்டுன்னு இவங்கள ஆட்டி எடுக்க முடியாது மாவு அயிட்டத்திலேயே ரொம்ப பக்குவம் குறையாம  ஆட்டி எடுக்க வேண்டியவங்க டம்ளர் கணக்குக்கு  நான்  சொல்லுறேன். ஒரு டம்ளர் இட்லி அரசி, 2 டம்ளர் பச்சை அரிசி, அரை டம்ளர் உளுந்து, கொஞ்சம் வெந்தையம். எல்லாத்தையும் போட்டு மொத்தமா ஊற வைக்கவும் ஒரு 3 மணி நேரத்துக்கு பின் ஆட்டும் பொழுது ஒரு சோத்து கரண்டி சாதத்தையும் சேர்த்து ஆட்டனும். இப்ப முடிஞ்சு மாவை அள்ளும் பொழுது ஒரு டீஸ்பூன் ஈஸ்ட் சேர்த்து ஆட்டி வையுங்க ஈஸ்ட் சேர்த்து ஆட்டி வைக்குறது மாவு நிறைய பொங்கும் அதனால ஆட்டின  மாவை பெரிய பாத்திரத்தில எடுத்து வையுங்க காலை மாவை நல்லா தண்ணி ஊத்தி ஆப்பம் சுட்டு பாருங்க சும்மா அப்படி இருக்கும். தொட்டுக்க தேங்க பால், அல்ல தேங்காய் சட்னி  நான் வெஜ் பிரியருங்க பாய தொட்டு சாப்பிடுவாங்க அடடா

                                                                                                                 ஆட்டுக்கால் பாயா ... 

இனிப்பு பணியாரம்...

புளிக்காத தோசை மாவில் மாவு ரொம்ப தண்ணியா இருக்க கூடாது கொஞ்சம் திக்கா இருக்கணும் வெள்ளத்தை  பொடிச்சு. இல்லை பொடி பண்ணியதே இங்க கிடைக்கும் மாவுக்கு தகுந்த மாதிரி 4 ஏலக்காய் இடிச்சு வெள்ளத்தையும் கலந்து வச்சு மாலை நேரங்களில் பசங்களுக்கு சுட்டு குடுத்திங்கன்னா பசங்க வேற நொறுக்கு தினிய தேடாம அடிக்கடி இதையே கேட்பாங்க

                                                                                                             ஆப்பம்...

குழிபணியாரம்...


அதே தாளிப்பு ஆனால் மாவ கம்மியா இருக்குறதுனால 2 வெங்காயத்துக்கு பதில் ஒரு வெங்காயம் போதும். மத்தது எல்லாம் ஒண்ணுதான் பணியாற சட்டி மிதமான சூட்டுலையே வைங்க இல்லைன்னா பணியார சட்டி சின்னதா   இருக்குறதுனால சீக்கிரம் கருகிடும். அப்புறம் இதுல கார பணியாரம் மட்டும்தான் பண்ண முடியும் இனிப்பு பண்ண முடியாது அதுக்கு மாவு புளிக்க கூடாது  

                                                                                                                 இனிப்பு பணியாரம்

மாவு புளித்துபோனால்...

பொதுவா நாம அரைத்துவைக்கிற மாவு ஒரு வாரம் தாங்கும் அதுக்கு மேல போகும் போதுதான் மாவு புளிக்க ஆரம்பிக்குது இப்ப நாம புளிச்ச மாவுல மாவு நிறையா இருந்தால் உத்தப்பம் தான் பெஸ்ட் நாம வீட்ல தாளிப்பு போடுவோமே அதே கொஞ்சம் கடுகு, உளுந்து, 4 வரமிளகாய் 1 கொத்து கருவபிள்ளை, கொஞ்சம் கடலைப்பருப்பு, கொஞ்சம் பெருங்காயம் 2 பெரிய வெங்காயம். தாளித்து மாவுல கொட்டி கலக்குங்க இப்ப மாவுல உத்தப்பம் போடுங்க சும்மா நச்சுன்னு புளிப்பே தெரியாம இருக்கும். மாவு கொஞ்சமா இருந்தால்?                                                    
                                                                                                             குழிபணியாரம் ...

தோசை மாவு ...

பொதுவா தோசைன்னாலே எல்லாருக்கும் பிடிக்கும் எனக்கெல்லாம் 3 வேலையும் சாப்பிட கொடுத்தாகூட சாப்பிடுவேன். சாதரணம வீட்டில சுட்டு தற தோசையோட கடையில சுட்டு தற தோசை இன்னும் சுவைய சூப்பரா இருக்கும். ஏன்னா நம்மை வர வைக்கும் தந்திரம் அது! சரி இப்ப தோசை மாவு கலவைய பார்ப்போம் தனிய வைத்த தோசை மாவில் ஒரு கரண்டி மைதா மாவு, ஒரு கரண்டி அரசி மாவு , 4 டீஸ்பூன் கடலை மாவு   3 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து தனிய கரைங்க! என்னங்க  இதெல்லாம் கலக்குனுமான்னு யோசனையா? கலந்து ஒரு முறை பசங்களுக்கு சுட்டு கொடுத்து பாருங்க அப்புறம் எப்பவும் வீட்டுல அம்மா சமைல்தான். இது நாம அரைத்து தனிய வைத்த தோசை மாவுக்கான கலவை தான் கூடுதல அரைக்கும் பொழுது அதற்க்கான கலவைய கூட்டிகிங்க இதனால மாவும் சீக்கிரம் புளிக்காது.

                                                                       நாளை   புளித்து போன மாவில் ...

Sunday, October 20, 2013

இன்னைக்கு நம்ம இட்லி மாவு பார்ப்போம்.

பொதுவா வீட்ல இட்லிக்கு ஊறவைக்கும் பொழுது நாம் கவனிக்க வேண்டியது என்னட (இதுக்கு போய் ஆலோசனையான்னு யோசிப்பிங்க) நான் கவனிக்கும் சில வீடுகளில் அந்த கலவையே தெரியாம நிறைய பேரு இருக்காங்க அதான். இங்க அமெரிக்காவுல இட்லி அரசி அநியாய விலை அதற்க்கு மாற்றாய் ஒரு யோசனை காஸ்ட்கோ வில் விற்பனையாகும் ஜாஸ்மின் அரிசி (Jasmine rice) வாங்கி அதனை இட்லி அரிசியுடன் 2 க்கு 3 என்ற கணக்கில் (2 டம்ளர்  இட்லி அரசி ,3 டம்ளர் ஜாஸ்மின் அரசி  விகிதம் ) ஊற வைக்கவும். இத்துடன் அதே அளவு டம்ளரில் 1டம்ளர் உளுந்து (முழு உளுந்தா இருந்தா இன்னும் நல்லது ) 2 டீஸ்பூன் அளவு வெந்தயத்தையும் சேர்த்து  ஒன்றாகவே உறவைக்கவும். ஒரு 3 மணி நேரத்திற்கு பின் கிரைண்டரில் போட்டு நல்லா தோசை மாவு பக்குவத்திற்கே ஆட்டி எடுக்கவும் .மாவு ஆட்டும் பொழுது உற வைத்த தண்ணிரையே பயன்படுத்தவும். மாவை நன்றாக விளக்கு வெளிச்சமோ வெயில் வெளிச்சமோ படும் இடத்தில்  வைத்து புளிக்க  வைக்கவும். புளிக்க வைப்பது ரொம்ப முக்கியம் . இப்பொழுது மாவை இரண்டாக பிரித்து ஓன்று தோசைக்கு ஓன்று இட்லிக்கு பிரித்துக்கொள்ளுங்கள். இட்லி மாவு புளிக்காத பொழுது சிரிது சோடா உப்பு சேர்த்து கொள்ளலாம் .

                                                                           நாளை  தோசை மாவு ...

வாங்க சாப்பிடலாம்.


20 வருட அனுபவத்தாலும் உணவின் மீது கொண்ட காதலாலும் சிறுதளவு தொடங்கிய எனது இந்த வாழ்கையின் வளர்ச்சி... உங்களின் ஆசியோடு இன்று முதல் இந்த பக்கத்தில் பகிர்ந்து கொள்ள போகிறேன்.