Sunday, October 20, 2013

இன்னைக்கு நம்ம இட்லி மாவு பார்ப்போம்.

பொதுவா வீட்ல இட்லிக்கு ஊறவைக்கும் பொழுது நாம் கவனிக்க வேண்டியது என்னட (இதுக்கு போய் ஆலோசனையான்னு யோசிப்பிங்க) நான் கவனிக்கும் சில வீடுகளில் அந்த கலவையே தெரியாம நிறைய பேரு இருக்காங்க அதான். இங்க அமெரிக்காவுல இட்லி அரசி அநியாய விலை அதற்க்கு மாற்றாய் ஒரு யோசனை காஸ்ட்கோ வில் விற்பனையாகும் ஜாஸ்மின் அரிசி (Jasmine rice) வாங்கி அதனை இட்லி அரிசியுடன் 2 க்கு 3 என்ற கணக்கில் (2 டம்ளர்  இட்லி அரசி ,3 டம்ளர் ஜாஸ்மின் அரசி  விகிதம் ) ஊற வைக்கவும். இத்துடன் அதே அளவு டம்ளரில் 1டம்ளர் உளுந்து (முழு உளுந்தா இருந்தா இன்னும் நல்லது ) 2 டீஸ்பூன் அளவு வெந்தயத்தையும் சேர்த்து  ஒன்றாகவே உறவைக்கவும். ஒரு 3 மணி நேரத்திற்கு பின் கிரைண்டரில் போட்டு நல்லா தோசை மாவு பக்குவத்திற்கே ஆட்டி எடுக்கவும் .மாவு ஆட்டும் பொழுது உற வைத்த தண்ணிரையே பயன்படுத்தவும். மாவை நன்றாக விளக்கு வெளிச்சமோ வெயில் வெளிச்சமோ படும் இடத்தில்  வைத்து புளிக்க  வைக்கவும். புளிக்க வைப்பது ரொம்ப முக்கியம் . இப்பொழுது மாவை இரண்டாக பிரித்து ஓன்று தோசைக்கு ஓன்று இட்லிக்கு பிரித்துக்கொள்ளுங்கள். இட்லி மாவு புளிக்காத பொழுது சிரிது சோடா உப்பு சேர்த்து கொள்ளலாம் .

                                                                           நாளை  தோசை மாவு ...

No comments:

Post a Comment